×

மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ஜி.ஹெச்சில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

திருவாரூர், மார்ச் 5: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏவுமான பூண்டி கலைவாணன் அணிவித்தார். திமுக தலைவர் மு க ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ஆண்டுதோறும் திருவாரூரில் மாவட்ட இளைஞரணி சார்பில் அரசு மருத்துவமனையில் மார்ச் 1ம் தேதி பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அதன்படி நடப்பாண்டில் திருவாரூர் விஜயபுரம் தாய்சேய் நல மருத்துவமனையில் கடந்த 1ம் தேதி பிறந்த 10 குழந்தைகளுக்கு நேற்று தங்க மோதிரம் மற்றும் கிப்ட் பாக்ஸ்களை கட்சியின் மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான பூண்டி கலைவாணன் வழங்கினார். இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரஜினி சின்னா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் பிரகாஷ், விவசாய தொழிலாளர் அணி மாநில துணைச் செயலாளர் சங்கர், நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : babies ,birthday ,MH Stalin ,
× RELATED பல்வேறு மாநிலங்களில் திருடி...