×

2 பவுன் செயின் பறிப்பு வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை

 

திருவாரூர், ஜூன் 11: திருவாரூர் மாவட்டம் பேளரத்தில் 2 பவுன் செயின் பறிப்பு வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நன்னிலம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. புதுவை மாநிலம் காரைக்கால் கைலாசர் தெருவை சேர்ந்தவர் பெரியகருப்பன் மகன் செந்தில்குமார். கடந்தாண்டு திருவாரூர் மாவட்டம் பேரளத்திற்கு வருவதற்காக பேருந்திற்கு காத்திருந்தபோது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் தான் அழைத்து செல்வதாக கூறி பேரளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாவட்டகுடி பகுதியில் வந்தார்.

அப்போது செந்தில்குமார் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளார். பின்னர் இதுதொடர்பாக செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில் பேரளம் போலீசார் வழக்குபதிவு செய்து சிசிடிவி கேமிரா பதிவுகளின்படி காரைக்கால், திருநள்ளார் அறங்காநகர் பகுதியை சேர்ந்த குமார் மகன் மகேஷ் (24) என்பவரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கு நன்னிலம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று இறுதி விசாரணை நடைபெற்ற மகேஷ்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பாரதிதாசன் தீர்ப்பளித்தார். இதனையடுத்து அவரை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

The post 2 பவுன் செயின் பறிப்பு வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Nannilam court ,Belaram ,Thiruvarur district ,Kailasar Street ,Karaikal ,Puduvai ,
× RELATED பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வழக்கில்...