×

குடியாத்தம் வனப்பகுதியில் பரபரப்பு இறந்த ஒற்றை யானையை தேடி வந்த யானைக்கூட்டம்: இரவில் தூக்கத்தை தொலைத்த கிராம மக்கள்

குடியாத்தம், மார்ச் 5: குடியாத்தம் வனப்பகுதியில் இறந்த ஒற்றை யானையை தேடி வந்த யானைகளின் அட்டகாசத்தால் அப்பகுதி கிராம மக்கள் இரவில் தூக்கத்தை தொலைத்தனர்.கிருஷ்ணகிரி வனப்பகுதியில் இருந்து கடந்த மாதம் 30க்கும் மேற்பட்ட யானைகள் வேலூர் மாவட்டம், குடியாத்தம் வனப்பகுதியில் நுழைந்தது. வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் யானைக் கூட்டங்கள் 2 பிரிவாக பிரிந்து இங்குள்ள பயிர்களை சேதப்படுத்தி வந்தது.பின்னர், குடியாத்தம் வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், ஒலி எழுப்பியும் யானைக்கூட்டத்தை விரட்டி அடித்தனர். அதன்பிறகு இப்பகுதியில் ஒற்றை யானை மட்டும் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்தது. இந்நிலையில், கடந்த 2ம் தேதி இந்த மின்வேலியில் சிக்கி ஒற்றை யானை இறந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு குடியாத்தம் வனப்பகுதியில் இறந்த ஒற்றை யானையை தேடி 2 குட்டி யானைகள் உட்பட மொத்தம் 9 யானைகள் சைனகுண்டா கிராமத்தில் நுழைந்தது. அப்போது, ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர், யானைகளை பட்டாசு வெடித்து மீண்டும் காட்டுக்குள் விரட்டி அடித்தனர். யானைகளை விரட்டியபோது விவசாய நிலங்களிலிருந்த மா செடி மற்றும் மரக்கிளைகளை முறித்து சேதப்படுத்தியது. யானைகளின் அட்டகாசத்தால் அப்பகுதி மக்கள் இரவில் தூக்கத்தை தொலைத்தனர்.

Tags : forest ,Gudiyatham ,
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...