×

சேலத்தில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி அலுவலகம் திறப்பு

சேலம், மார்ச் 3: அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் சேலம் மாவட்ட கிளை அலுவலகம் திப்பு சுல்தான் மார்க்கெட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா  நடந்தது. கட்சியின் மாநிலத் தலைவர் வக்கீல் அஹமத் திறந்து வைத்து பேசுகையில், ‘‘டெல்லியில் பாதிக்கப்பட்ட அனைத்து சமூக மக்களுக்கும் உதவி செய்ய வேண்டும்,’’ என்று அறிவுறுத்தினார். மிக விரைவில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தேசிய தலைவரும், எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி சேலம் வரவுள்ளார் என்றும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாநில செயலாளர்கள் இம்தியாஸ், முஜிபூர் ரஹிமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் இமாம் மொஹிதீன் வரவேற்று பேசினார். மாவட்ட பொருளாளர் முஹமதுபாசில் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்தார். மாவட்ட செயலாளர் சேவகன் இப்ராஹிம், மாவட்ட துணைத் தலைவர் யாசர்அராபத், இணை செயலாளர்கள் சதாம்உசேன், லியாகத்அலிகான் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Opening ,Salem ,All India Majlis Party Office ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...