×

மாநகராட்சி 54வது வார்டில் வாக்குச்சாவடியை மாற்ற வலியுறுத்தல்

திருப்பூர், மார்ச் 1: திருப்பூர் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் கோவிந்தராஜ், மாநகராட்சி கமிஷனர் சிவக்குமாரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதவாது.திருப்பூர் மாநகராட்சி 54வது வார்டில், உள்ள கருப்பகவுண்டம்பாளையம் பகுதியில் சுமார் 3,000 வாக்காளர்கள் உள்ளனர். இப்பகுதியில் மக்கள் நடந்து முடிந்த அனைத்து தேர்தலிலும் கருப்பகவுண்டம்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் வாக்களித்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள வரைவு வாக்குச்சாவடி பட்டியலில் கருப்பகவுண்டம்பாளையம் பகுதி வாக்காளர்கள், சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ள வீரபாண்டி அரசுப் பள்ளிக்கு சென்று வாக்களிக்க பிரித்து பட்டியல் வெளியாகி உள்ளது.
ஆண்டாண்டு காலமாக உள்ளூரில் வாக்களித்த மக்கள், தற்போது தொலைவில் உள்ள வீரபாண்டி பள்ளிக்கு செல்ல மறுக்கிறார்கள். எனவே உண்மை தன்மையை ஆய்வு செய்து மாற்றப்பட்ட வாக்குச்சாவடி மையத்தை மீண்டும் கருப்பகவுண்டம்பாளையம் பகுதிக்கு மாற்றித்தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Tags : Corporation ,Ward ,
× RELATED செல்போனுக்கு சார்ஜ் போடும் போது...