×

புகையிலை பொருட்கள் பறிமுதல்

 

பல்லடம், ஜூன் 10: பல்லடம் ஆறுமுத்தாம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே, பல்லடம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் பைக்கில் மூட்டையுடன் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தபோது அவர் திருப்பூர் முருகம்பாளையத்தை சேர்ந்த, முருகன் என்பவரது மகன் வேல்ராஜ் (30) என்பதும், புகையிலை பொருட்களை, கடைகளுக்கு வினியோகம் செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 18 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் அவர் பயன்படுத்திய மோட்டார் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவரை பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post புகையிலை பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Palladam ,Palladam police ,Arumuthampalayam ,Murukampalayam, Tirupur ,Dinakaran ,
× RELATED பணிக்கம்பட்டியில் கூட்டுறவு சங்கம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை