×

செல்போனுக்கு சார்ஜ் போடும் போது மின்சாரம் தாக்கி டிரைவர் பலி போலீஸ் விசாரணை ஒடுகத்தூர் அருகே

ஒடுகத்தூர், ஜூன் 7: ஒடுகத்தூர் அருகே செல்போனுக்கு சார்ஜ் போடும் போது மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு வெங்கனப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சாந்தி(60). இவரது கணவர் கண்ணையன் உயிரிழந்த நிலையில், இவர்களுக்கு, 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களது மகன் முருகன்(40) திருமணமாகாத நிலையில், லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான முருகன் நாள்தோறும் குடித்து விட்டு தாயிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாந்தி குடியாத்தத்தில் உள்ள மகளின் வீட்டிற்கு சென்று விட்டார்.

தற்போது, முருகன் மட்டும் தனியாக வசித்து வந்த நிலையில், வழக்கம்போல் நேற்றும் முருகன் மது குடித்து விட்டு மாலை 3 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டை உள் பக்கமாக தாழிட்டு கொண்டு தூங்கி கொண்டிருந்துள்ளார். அப்போது, மது போதையில் தனது செல்போனுக்கு சார்ஜ் போடும் போது எதிர்பாராத விதமாக திடீரென மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நீண்ட நேரமாகியும் முருகன் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை தட்டி பார்த்துள்ளனர். ஆனால், எந்த பதிலும் இல்லாததால் சந்தேகமடைந்த அவர்கள் வீட்டின் பின் பக்கம் சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, முருகன் சடலமாக இருப்பது தெரிய வந்தது. உடனே இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post செல்போனுக்கு சார்ஜ் போடும் போது மின்சாரம் தாக்கி டிரைவர் பலி போலீஸ் விசாரணை ஒடுகத்தூர் அருகே appeared first on Dinakaran.

Tags : Odugathur ,Vellore District, 1st Ward Venkanapalayam ,Odugathur Municipal Corporation ,Dinakaran ,
× RELATED பழைய நாணயங்களுக்கு பல லட்சம் தருவதாக...