×

பள்ளிகள் திறப்பையொட்டி பஸ், ரயில்களில் அலைமோதிய கூட்டம்

 

திருப்பூர், ஜூன் 10: கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கபடுவதால் திருப்பூரிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ், ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தமிழ்நாட்டில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்த பள்ளிப் பொதுத்தேர்வுகளுக்கு பிறகு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கோடை விடுமுறைக்கு பிறகு இன்று (10ம் தேதி) அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்து இருந்தது.

பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர். இந்நிலையில், கோடை விடுமுறையில் சில மாணவர்கள் உறவினர்கள் வீட்டிற்கும் வந்தனர். அப்படி வந்த மாணவர்கள் சுமார் 50 நாள் விடுமுறையை மகிழ்ச்சியாக கழித்தனர்.

இந்நிலையில், பள்ளிகள் இன்று திறக்கப்படுவதையொட்டி திருப்பூரில் உள்ள உறவினர் வீடுகளில் தங்கியிருந்த மாணவர்களை தங்கள்  பெற்றோர்கள் வந்து சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர். இதனால் திருப்பூரிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பஸ், ரயில்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. விற்பனைக்காக விவசாயிகள் 33 கால்நடைகளை கொண்டு வந்திருந்தன. தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து மாடுகளை வாங்க வந்திருந்தனர்.

The post பள்ளிகள் திறப்பையொட்டி பஸ், ரயில்களில் அலைமோதிய கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Tamil Nadu ,
× RELATED திருப்பூர் தெற்கு தொகுதியில் அரசு...