×
Saravana Stores

மணல் கடத்தல் தடுக்க நொய்யல் ஆற்றின் முக்கிய பகுதிகளில் கேமரா அமைக்க வலியுறுத்தல்

கோவை, மார்ச் 2:  கோவை நொய்யல் ஆற்றின் துவக்கமான செம்மேடு, கூடுதுறை, முள்ளங்காடு, அம்மன் கோயில் வனப்பகுதி ஆறு, இருட்டுப்பள்ளம் உள்ளிட்ட பகுதியில் டிராக்டர், மாட்டு வண்டி மூலமாக தினமும் மணல் கடத்தப்படுகிறது. சாக்கு மூட்டைகளில் மணல் கட்டி வைத்து புதர் காடு வழியாக கழுதைகளை பயன்படுத்தி ரோட்டிற்கு மணல் மூட்டைகளை கொண்டு வந்து டிராக்டரில் ஏற்றி கடத்தி வருகின்றனர். சிலர் ஆற்றுக்குள் வாகனத்தை நிறுத்தி மணல் லோடு ஏற்றி கடத்துகின்றனர். தினமும் 100 முதல் 150 டன் மணல் கடத்தப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. சித்திரை சாவடி அணைக்கட்டு பகுதியில் 10 அடி உயரத்திற்கு மணல் தேக்கம் இருந்தது. கடந்த 3 மாதத்தில் 8 அடி வரையில் இருந்த மணல் தேக்கம் காணாமல் போய்விட்டது. போளுவாம்பட்டி, ஆலாந்துறை, செம்மேடு உள்ளிட்ட பகுதியில் ஒரு டிராக்டர் கடத்தல் மணல் 10 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது. இரவு பகலாக மணல் கடத்தல் நடந்தாலும் போலீசாரும், கனிமவளத்துறையினரும், வருவாய்த்துறையினரும் கண்டுகொள்வதில்லை.
இது தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், ‘‘ மணல் கடத்தல் வாகனங்களை பிடித்து கொடுத்தால் போலீசார், வருவாய்த்துறையினர் விட்டு விடுகின்றனர். பூலுவப்பட்டி, ஆலாந்துறை, தொண்டாமுத்தூர் ரோடு சந்திப்பு, செம்மேடு, சித்திரை சாவடி அணை உட்பட பல்வேறு இடங்களில் ஆற்றின் அருகே கண்காணிப்பு கேமரா அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். திருட்டு வாகனங்களை கண்காணித்து ஆதாரத்துடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்,’’ என்றனர்.


Tags : areas ,Noel River ,
× RELATED சென்னையில் 180 வெள்ள அபாய பகுதிகள்...