×

சேலத்தில் போதையில் எஸ்ஐயை தாக்கிய ஆயுதப்படை போலீஸ்காரர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை பாய்கிறது

சேலம், மார்ச் 2:சேலத்தில் குடிபோதையில் எஸ்ஐயை தாக்கிய ஆயுதப்படை போலீஸ்காரர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை பாய்கிறது. சேலம் மாவட்டம், மேச்சேரி அருகேயுள்ள குள்ளமுடையானூரை சேர்ந்தவர் பாலாஜி (32), போலீஸ்காரர். ஓமலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டருக்கு ஜீப் டிரைவராக இருந்த அவர், குடிபோதையில் இருந்ததால், மாவட்ட ஆயுதப்படைக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன் மாற்றப்பட்டார். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன் அளவுக்கு அதிகமான குடிபோதையில் மேச்சேரி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பைக்கில் வந்துள்ளார். அப்போது, வாகன சோதனையில் இருந்த மேச்சேரி எஸ்ஐ அருண்குமார் தலைமையிலான போலீசார், போலீஸ்காரர் பாலாஜியை மறித்து சோதனையிட்டனர். அப்போது, எஸ்ஐ அருண்குமாரிடம் தகராறில் ஈடுபட்டு, அவரை தாக்கியுள்ளார்.

இதுபற்றி மேச்சேரி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து, போலீஸ்காரர் பாலாஜியை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் பற்றி விசாரித்து அறிக்கை அளிக்க மேட்டூர் டிஎஸ்பி சவுந்தரராஜனுக்கு எஸ்பி தீபாகனிகர் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், துறைரீதியான விசாரணையை டிஎஸ்பி நடத்தி வருகிறார். இந்த விசாரணை அறிக்கையை எஸ்பியிடம் கொடுத்ததும், போலீஸ்காரர் பாலாஜி மீது துறைரீதியான நடவடிக்கையாக சஸ்பெண்ட் செய்யப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : policeman ,Salem ,
× RELATED வேலூரில் திருமணம் செய்யும் படி பெண்...