×

கிருஷ்ணகிரி துவாரகாபுரியில் அண்ணா சிலை திறப்பு, திமுக கொடியேற்று விழா

கிருஷ்ணகிரி, பிப்.17: கிருஷ்ணகிரி துவாரகாபுரியில் நடைபெற்ற விழாவில், அண்ணா சிலையை திறந்து வைத்த திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக கொடியினை ஏற்றி வைத்தார். கிருஷ்ணகிரி டேம் அருகே உள்ள பெரியமுத்தூர் ஊராட்சி துவாரகாபுரியில், திமுக சார்பில் அண்ணா சிலை திறப்பு மற்றும் திமுக கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி. சுகவனம், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணை தலைவர் மதியழகன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ரஜினிசெல்வம் வரவேற்றார். திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, திமுக கொடியினை ஏற்றி வைத்து, அண்ணா சிலையை திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், ‘தர்மபுரியில் நடைபெற்ற திமுக இளைஞரணி பயிற்சி பாசறை கூட்டத்தில் பங்கேற்க வந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கழக கொடியினை ஏற்ற, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் இந்த பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்துள்ளார். அவருக்கு எனது முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எத்தனையோ நிகழ்ச்சிகள், கூட்டங்களில் கலந்து கொண்டாலும், மனசுக்கு தெம்பையும், தைரியத்தையும் கொடுக்கும் நிகழ்ச்சி என்றால் அது கழக கொடியினை ஏற்றி வைப்பது தான். அதற்கு வாய்ப்பளித்த இந்த பகுதி மக்களுக்கும், நிர்வாகிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன்,’ என்றார். நிகழ்ச்சியில், திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏ., கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட துணை செயலாளர் நாகராஜ், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன்,

தலைமை செயற்குழு உறுப்பினர் பொன்.குணசேகரன், தம்பிதுரை, பொதுக்குழு உறுப்பினர் ராஜன், நகர செயலாளர் நவாப், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், கோவிந்தசாமி, சுப்பிரமணி, கோவிந்தராஜ், சாந்தமூர்த்தி, செல்வம், சாமிநாதன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அமீன், சுந்தர்ராஜ், நிர்வாகிகள் நாராயணமூர்த்தி, டேம்.பிரகாஷ், அஸ்லாம், வாசுதேவன், சந்திரசேகர், கவுரப்பன், ராஜூ உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : Anna ,Krishnagiri ,flag ceremony ,DMK ,
× RELATED அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சம்மர் கேம்ப்