×

உடற்கல்வி ஆய்வாளர் சஸ்பெண்ட்

கிருஷ்ணகிரி, பிப்.17: கிருஷ்ணகிரி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் வளர்மதி. இவர், பணியிடை நீக்கம்(சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கை கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தபோது, கடந்த ஆண்டில் ஆசிரியர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையில், குறைவாக வழங்கி கூடுதலாக வழங்கியதை போல, அவர்களிடம் கையெழுத்து பெற்ற புகார் உள்பட பல்வேறு புகாரின்பேரில் அவர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Tags : Analyst ,
× RELATED தஞ்சாவூர் அருகே வடுகக்குடி வாழை...