×

இனாம் கரூர் பகுதியில் குளம்போல் தேங்கி கிடக்கும் கழிவுநீர்


கரூர், பிப்.13: குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேக்கத்தினால் சுகாதார சீர்கேட்டில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர். கரூர் நகராட்சி பகுதியில் இனாம் கரூர் பகுதி இணைக்கப்பட்டிருக்கிறது. இனாம் கரூர் பகுதி சின்னகுளத்துப்பாளையத்தில் வடிகால் வசதியில்லை. வடிகால் வசதி கேட்டு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இதனால் கழிவுநீர் வடிய வழியில்லை. காலியிடங்களில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இந்த இடங்களில் சீத்தைமுட்களும்,கோரைப்புற்களும் முளைத்துக் காணப்படுகிறது. கொசு உற்பத்தியாகும் இடமாக மாறிவருகிறது. இரவு நேரங்களில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் உள்ளதால் இடையூறாக இருக்கிறது. சின்னகுளத்துப்பாளையம் பகுதிக்கு வடிகால் வசதியை ஏற்படுத்தி கழிவுநீர் தேங்குவதால் ஏற்படும் சுகாதார பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும் என இப்பகுதிவாழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Inam Karur ,
× RELATED காவிரியில் போதிய இருப்பு இல்லாததால்...