×

சேலம் பள்ளப்பட்டி முனியப்பன் கோயில் விழாவில் எருதாட்டம்

சேலம், பிப்12: சேலம் பள்ளப்பட்டியில் முனியப்பன் கோயில் திருவிழாவையொட்டி எருதாட்டம் நடந்தது. சேலம் பள்ளப்பட்டி முனியப்பன் கோயிலில் தை மாத திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று மாலை, முனியப்பனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து, பள்ளப்பட்டி மாரியம்மன் கோயில் திடலில் எருதாட்டம் நடந்தது. இதில், 15 மாடுகளை கொண்டு வந்தனர். ஒவ்வொரு காளையாக களத்தில் இறக்கி விட்டு, உரும்பியை வைத்து ஆட்டம் காட்டினர். சில மாடுகள் சீற்றம் கொண்டு பாய்ந்தன. அப்போது, கயிறால் வாலிபர்கள் இழுத்து பிடித்துக் கொண்டனர். இந்த எருதாட்டத்தின் போது, சில வாலிபர்கள் ஓட்டம் பிடித்து கீழே விழுந்து காயமடைந்தனர். பள்ளப்பட்டி, சாமிநாதபுரம், செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கோயில் திடலில் திரண்டிருந்து எருதாட்டத்தை கண்டு களித்தனர். விழாவையொட்டி எஸ்ஐ முரளி தலைமையில் பள்ளப்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : Salem Pallipatti Muniyappan Temple Festival ,
× RELATED விதை நேர்த்தி குறித்த செயல்விளக்க பயிற்சி