×

தாந்தோணிமலை அரசு கல்லூரி அருகே நிழற்குடை அமைக்கும் பணி விரைவுப்படுத்தப்படுமா?

கரூர், பிப். 12: தாந்தோணிமலை அரசு கல்லூரி அருகே கட்டப்பட்டு வரும் நிழற்குடையை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மாணவ, மாணவிகள் எதிர்பார்க்கின்றனர். கரூர் தாந்தோணிமலையில் அரசு கலைக் கல்லூரி உள்ளது. கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் இதில் பயின்று வருகின்றனர். காலை மாலை என இரண்டு வேளைகளில் கல்லூரியில் பாடங்கள் நடத்தப்படுவதால் எந்த நேரமும் மாணவ, மாணவிகள் கல்லூரி முன்பு நின்று தங்கள் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த பகுதியில் குறிப்பிடும்படியான நிழற்குடை எதுவும் இல்லாத நிலையில், நவீன நிழற்குடை அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதன்படி, கல்லூரி அருகே நிழற்குடை அமைக்கும் வகையில் பூமி பூஜை போடப்பட்டது. தற்போது ஓரளவு பணிகள் நடைபெற்றுள்ளன.

மீதமுள்ள பணிகளையும் விரைந்து முடித்து, மாணவ, மாணவிகள் பயன்படுத்தும் வகையில் தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என மாணவ, மாணவிகள் உட்பட அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர். மாணவ, மாணவிகள் மட்டுமின்றி, இந்த பகுதியை சுற்றிலும் உள்ள பொதுமக்களும் நூற்றுக்கணக்கில் இந்த பேரூந்து நிறுத்தத்தில் நின்று, கரூர் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு பஸ் ஏறிச் செல்கின்றனர். எனவே, அனைத்து தரப்பினர்களின் நலன் கருதி கட்டப்பட்டு வரும் நிழற்குடை பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : college ,
× RELATED மாமல்லபுரத்தில் சாலை...