×

காடையாம்பட்டி அருகே அரசு பஸ், மினி லாரி நேருக்கு நேர் மோதல்

காடையாம்பட்டி, பிப்.11: காடையாடம்பட்டி அருகே அரசு பஸ், மினி லாரி நேருக்கு நேராக மோதிக்கொண்டதில் டிரைவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதில் 3 பயணிகள் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இருந்து துறையூர் நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. பஸ்சை துறையூரை சேர்ந்த டிரைவர் சிவா ஓட்டி வந்தார். அப்போது  கோவையில் இருந்து பெங்களூருவுக்கு கெமிக்கல் கேன்களை ஏற்றிக்கொண்டு மினி லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது, லாரியின் முன்பக்க டயர் வெடித்து, சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு மறுபக்க சாலையில் சென்றது. அப்போது பஸ் மீது நேருக்கு நேராக மோதியது. இதில் மினி லாரி டிரைவரான நல்லம்பள்ளியை சேர்ந்த சதீஷ்குமார் பலத்த காயமடைந்தார்.

அதேபோல், பஸ்சில் பயணம் செய்த கொங்கணாபுரத்தை சேர்ந்த புஷ்பா  உட்பட 4 பேர் காயமடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றவர்கள் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் டெம்போவில் இருந்த கெமிக்கல் ஏற்றிவந்தகேன்கள் சாலை முழுவதும் சிதறி ஆயிலாக காணப்பட்டது. இதனால் 2 மணி நேரம் சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : collision ,Kadaiyampatti ,
× RELATED மோடிக்கும், ராகுலுக்கும் இடையே நடக்கும் போட்டி: அஜித் பவார் பேச்சு