×

அரியலூர் மாவட்ட அளவில் திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

அரியலூர், பிப்.7: அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவில் நடைபெற்ற திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் ரத்னா பரிசுகள் மற்றும் கேடயம் வழங்கி, பாராட்டினார்.இளைஞர்கள் தங்களது தொழில் திறன்களையும், திறமையும் வெளிப்படுத்தும் வகையில் சர்வேதசதிறன் போட்டிகள் சீனா, ஷாங்காய் நகரில் 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்வதற்கான தொடக்கமாக, மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு, பயிற்சிதுறை இணைந்து, கடந்த 20-1-2020 முதல் 31-1-2020 வரை எலக்ட்ரிக்கல் இன்ஸ்டாலேஷன், எலக்ட்ரானிக்ஸ், பிளம்பிங் ரூட்டிங் மற்றும் வெல்டிங் போன்ற தொழில் திறன்களில் அரியலூர், அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் அரியலூர், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடைபெற்றது.

இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற எலக்ட்ரிக்கல் இன்ஸ்டாலேஷன் பிரிவில் முதலிடம்-தமிழரசி, இரண்டாமிடம்-தமிழ்பொன்னி, பிளம்பிங், கார்டனிங் பிரிவில் முதலிடம்-மணியரசன், இரண்டாமிடம்-வெற்றிவேல் மற்றும் வெல்டிங் பிரிவில் முதலிடம்-சத்தியமூர்த்தி, இரண்டாமிடம்-நவீன்குமார் ஆகியோருக்கு மாவட்ட கலெக்டர் ரத்னா சான்றிதழ், பரிசுக்கேடயம் வழங்கி பாராட்டினார்.மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், சென்னையில் நடைபெறவுள்ள மாநில திறன் போட்டியில் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் பாலாஜி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : competitions ,Ariyalur district ,
× RELATED அரியலூர் மாவட்டதொழில்நெறி...