×

சூளகிரியில் வேளாண் மாணவர்களுக்கு மலர் சாகுபடி பயிற்சி

சூளகிரி, பிப்.6:சூளகிரி அடுத்த அத்திமுகம் அதியமான் வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவ, மாணவிகளுக்கு மலர் சாகுபடி குறித்த பயிற்சி நடந்தது. கல்லூரி முதல்வர் விஜயராகவன் வழிகாட்டுதலின் பேரில், தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள கிரிகனப்பள்ளியில் உள்ள ரோஜாப்பூ பண்ணையிலும், அந்தேவனப்பள்ளியில் உள்ள சாமந்திப்பூ பண்ணையிலும் மலர் சாகுபடி பயிற்சி  அளிக்கப்பட்டது. பசுமை குடில் மற்றும் பாலி ஹவுஸ் முறையை பின்பற்றி, ரோஜாப்பூ சாகுபடி செய்வது குறித்த தொழில்நுட்பங்களை பண்ணையின் மேலாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் செல்வகுமார் மற்றும் சாமந்திப்பூ சாகுபடி பற்றிய தொழில்நுட்பங்களை ஆராய்ச்சியாளர் சாம்பசிவ ராவ் ஆகியோர் மாணவர்களுக்கு விளக்கினர்.
இதில் மாணவ, மாணவிகள் கலந்துரையாடல் மூலம் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டனர். பயிற்சியை கல்லூரி தோட்டக்கலை துறை உதவி பேராசிரியர் கபிரியேல், சுற்றுச்சூழல் துறை உதவி பேராசிரியர் நந்தகுமார் மற்றும் மண்ணியல் துறை இணை பேராசிரியர் குமார் ஆகியோர்  ஒருங்கிணைத்தனர். கல்லூரி ஆய்வக உதவியாளர் லோகேஸ்வரன்  கலந்து கொண்டார். மாணவி ஜீவன்யா நன்றி கூறினார்.

Tags :
× RELATED சூளகிரி வட்டாரத்தில் பஸ் வசதியின்றி கிராம மக்கள் அவதி