×

வாழப்பாடி- ஆத்தூர் நெடுஞ்சாலையில் உயிர்பலிக்கு காத்திருக்கும் பட்டுப்போன புளியமரம்

வாழப்பாடி, பிப்.4: வாழப்பாடி-ஆத்தூர் நெடுஞ்சாலையில், தனியார் பள்ளிக்கு செல்லும் பிரிவு சாலை அருகே, சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த புளியமரம் ஒன்று சாலையோரம் உள்ளது. இந்த புளியமரம் பட்டுப்போய் விட்டது. இந்த மரத்தின் பெரும்பாலான கிளைகள், சாலையின் பாதி வரை படர்ந்து வளர்ந்துள்ளது. கடந்த 6 மாதமாக புளியமரத்தின் கிளைகள், சூறைக்காற்று வீசும்போது முறிந்து சாலையில் விழுகிறது. இந்த சாலையில் அரசு தனியார் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சைக்கிள், டூவீலர் மற்றும் பள்ளி வாகனத்தில் செல்கின்றனர். பல சமயங்களில் பேருந்து செல்லும் போது சிறிய மரக்கிளை முறிந்து மேலே விழுவது வாடிக்கையாக உள்ளது. பள்ளி, கல்லூரி வாகனங்கள் அதிகளவில் இந்த சாலையில் செல்கிறது.

எனவே, பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு, பட்டுப்போன புளிய மரத்தை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாணவர்கள் நலன் கருதி, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : highway ,Attur ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!