×

குடியுரிமை திருத்த சட்டம், சிஏஏ, தேசிய மக்கள் தொகை பதிவேடு என மும்முனை தாக்குதலை கண்டித்து மனித சங்கிலி திருச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

திருச்சி, ஜன. 31: குடியுரிமை திருத்த சட்டம், சிஏஏ, தேசிய மக்கள் தொகை பதிவேடு என மக்களை மதரீதியாக பிளவுப்படுத்தும், மும்முனை தாக்குதலை எதிர்த்து அனைத்து கட்சியினர் மற்றும் அனைத்து மதத்தினர் கலந்துகொண்ட மனித சங்கிலி போராட்டம் திருச்சியில் நடந்தது.
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. திருச்சியில் முஸ்லிம் அமைப்பினர் மற்றும் அனைத்து கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் நேற்று மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் தலைமையில் குடியுரிமை திருத்த சட்டம், சிஏஏ, தேசிய மக்கள் தொகை பதிவேடு என மக்களை மதரீதியாக பிளவுப்படுத்தும் மும்முனை தாக்குதலை எதிர்த்து அனைத்து கட்சியினர் மற்றும் அனைத்து மதத்தினர் கலந்துகொண்ட மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

திருச்சி தலைமை தபால் நிலைய ரவுண்டானாவில் உள்ள காந்தி சிலை முதல் காந்தி மார்க்கெட்டில் உள்ள காந்தி சிலை வரை நடந்த இந்த மனித சங்கிலி போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இதில் கலந்து கொண்டவர்கள் முகத்தில் காந்தி மற்றும் அம்பேத்கர் மாஸ்க் அணிந்திருந்தனர்.

Tags : attack ,Human Rights Commission ,CAA ,
× RELATED தூத்துக்குடி துப்பாக்கி சூடு...