×

டீக்கடையில் மாமூல் வசூலித்த போலி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சிக்கினார்

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை, தாண்டவராயன் தெருவில்  டீக்கடை நடத்தி வருபவர் மாடசாமி (50). கடந்த 22ம் தேதி இவரது கடைக்கு வந்த 2 பேர், நாங்கள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள். உங்களது கடையில் சோதனை செய்ய வந்துள்ளோம், என்றனர். பின்னர், கடையை பார்வையிட்டு, வீட்டுக்கு உபயோகிக்கும் சிலிண்டர் பயன்படுத்துகிறீர்கள். கலப்பட டீத்தூள்  உள்ளது. எனவே, உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறோம், என்றனர். உடனே, கடைக்காரர், தன் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கூறி, அவர்களுக்கு பணம் கொடுத்துள்ளார். அதை அவர்கள் பெற்றுக்கொண்டனர். இதனை, அந்த கடைக்கு வந்தவர்களில் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இது வைரலாக பரவியது.

  இதையடுத்து, தண்டையார்பேட்டை போலீசார் அந்த வீடியோவை ஆய்வு செய்து  விசாரணை நடத்தியதில்  மாமூல் வாங்கியவர் வியாசர்பாடி காந்தி நகரை சேர்ந்த ரமேஷ் (43), அவருடைய நண்பர் ஜோசப் ஒத்தேனியா  என்பது தெரியவந்தது. இதையடுத்து, நேற்று ரமேஷை பிடித்து விசாரித்ததில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி போல் நடித்து, பல கடைகளில் பணம் வசூலித்ததை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது நண்பர் ஜோசப் ஒத்தேனியாவை தேடி வருகின்றனர்

Tags : food security officer ,shop ,Mamool ,Dekat ,
× RELATED செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 1.3...