×

3 கிராம ஊராட்சிகளுக்கு துணைத்தலைவர் தேர்வு

தா.பழூர், ஜன. 31: அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் கடந்த 11ம் தேதி 33 ஊராட்சிகளுக்கு ஊராட்சி மன்ற துணை தலைவர்கள் தேர்வு செய்ய தேர்தல் நடத்தப்பட்டது. இதில் சாத்தம்பாடி, கார்குடி, காடுவெட்டாங்குறிச்சி ஆகிய மூன்று ஊராட்சிகளில் மட்டும் வார்டு உறுப்பினர்கள் வராததால் அங்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் 3 ஊராட்சிக்கு துணைத்தலைவர் தேர்தல் நேற்று அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் நடந்தது. இதில் கார்குடி ஊராட்சி மன்ற துணைத்தலைவராக ராஜேஸ்வரி, காடுவெட்டாங்குறிச்சி ஊராட்சி மன்ற துணை தலைவராக இளங்கோவன், சாத்தம்பாடி ஊராட்சி மன்ற துணைத்தலைவராக சின்னையன் ஆகியோர் வெற்றி பெற்றனர். சாத்தம்பாடி ஊராட்சியில் சிறப்பு தேர்தல் அதிகாரி ஜாகிர் உசேன் முன்னிலையில் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலுக்கு சாத்தம்பாடியில் 10க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Tags : Vice-Chairperson ,Village Panchayats ,
× RELATED குமரி மாவட்ட ஊராட்சிகளை வகை மாற்றம் செய்ய எதிர்ப்பு