×

கொடமாண்டப்பட்டியில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமி பூஜை

போச்சம்பள்ளி, ஜன.29: ஊத்தங்கரை தொகுதியில் ₹2.85 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணிகளுக்கான பூமி பூஜையை எம்எல்ஏ மனோரஞ்சிதம்நாகராஜ் துவக்கி வைத்தார். ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மத்தூர், கண்ணடஹள்ளி, சிவம்பட்டி, கவுண்டனூர், கொடமாண்டப்பட்டி, சூளகரை, வீராட்சிகுப்பம், கொடமாண்டப்பட்டி ஊராட்சிகளில் ₹2 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமி பூஜை போடப்பட்டது. ஊத்தங்கரை எம்எல்ஏ மனோரஞ்சிதம் நாகராஜ் தலைமை வகித்து பூமி பூஜையை செய்து பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தமிழ்துரை, தமிழரசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மீனாசக்தி, பழனியம்மாள் மனோகரன், வங்கி தலைவர் சக்தி, குன்னத்தூர் பெருமாள், பாப்டீவிபூபாலன், வட்டார மேற்பார்வையாளர் காசன், முனுசாமி, நடராஜ், தேவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Bhoomi Pooja ,Kodamantapatti ,
× RELATED நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில்...