×

உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி உலக சைக்கிள் தினம் கொண்டாட்டம்

போச்சம்பள்ளி, ஜன.19:  பர்கூர் ஒன்றியம், போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி ஊராட்சியில் ஆரோக்கியமான இந்தியா என்ற தலைப்பில் உலக சைக்கிள் தினம் கொண்டாடப்பட்டது. உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி செயல்படுத்தப்பட்டு வரும் பிரதமரின் பிட் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் நேற்று சைக்கிள் தினம் கொண்டாட அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் அறிவுறுத்துப்பட்டுள்ளது. அதன்படி, புளியம்பட்டி பஞ்சாயத்தில் நடந்த சைக்கிள் தின விழாவில், ஊராட்சி தலைவர் ரங்கநாதன் தலைமையில், துணை தலைவர் அம்சவேணிசெங்கான் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சைக்கிளில் ஊர்வலமாக சென்று, உடல் ஆரோக்கியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஊராட்சி செயலாளர் சிவசங்கர் நன்றி கூறினார்.

ஓசூர்: ஓசூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பேகேப்பள்ளி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் நேற்று சைக்கிள் தினம் கொண்டாடப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் சைத்ராஅருண்குமார் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். சைக்கிள் பேரணியானது பேகேப்பள்ளி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பஞ்சாயத்து அலுவலகத்தில் முடிந்தது. இதில் துணை தலைவர் பாண்டியராஜ், வார்டு உறுப்பினர்கள் காந்தா, பிரகாஷ், பிரேமா, பச்சையம்மாள், கோவிந்தன், ரவிபிரகாஷ், ஆனந்தி, வெங்கடலட்சுமம்மா, அருண்குமார், சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பஞ்சாயத்து செயலர் முருகேஷ்ரெட்டி செய்திருந்தார். சூளகிரி: சூளகிரி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கலைசெல்வி ராமன் தலைமையில் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்நிகழ்ச்சியில், சூளகிரி ஊராட்சி மன்ற துணை தலைர் வரலட்சுமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் 12 பேர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வளர்ச்சி துணை அலுவலர் விவேகானந்தன், ஊராட்சி செயலர் வெங்கடேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : World Bicycle Day Celebration ,
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு