×

சூளகிரி அருகே இருதரப்பினர் மோதலில் 3 பேர் கைது

சூளகிரி, ஜன.19: சூளகிரி அருகே இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே சிகரலப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(35). இவரது உறவினர் நாகமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி சரண்யாவிடம் கிருஷ்ணமூர்த்தி போனில் அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து அவர் சதீஷ்குமாரிடம் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் நேற்று முன்தினம் கிருஷ்ணமூர்த்தியிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். இதையடுத்து, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, கிருஷ்ணமூர்த்தி தரப்பை சேர்ந்த தர், சிவப்பெருமாள் மற்றும் சதீஷ்குமார் தரப்பை சேர்ந்த மைல்வேலு, தினேஷ்குமார் ஆகியோருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் படுகாயமடைந்த தர் ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சதீஷ்குமார், மைல்வேலு, தினேஷ்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் சதீஸ்குமார் கொடுத்த புகாரின் பேரில், தர், கிருஷ்ணமூர்த்தி, சிவப்பெருமாள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தலைமறைவாக உள்ள கிருஷ்ணமூர்த்தி, சிவப்பெருமாள் ஆகியோரை உத்தனப்பள்ளி போலீசார் தேடி வருகின்ற

Tags : clash ,Sulagiri ,
× RELATED மாமல்லபுரம் மகளிர் காவல் நிலையத்தில்...