×

இம்மாத இறுதியில் இயங்க இருந்த கோவை-அசன்சல் சிறப்பு ரயில் ரத்து

சேலம், ஜன.8: கோவை-அசன்சல் இடையே வரும் 18ம் தேதி செல்ல இருந்த சிறப்பு ரயில், இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கோவையில் இருந்து மேற்கு வங்க மாநிலம் அசன்சல்லுக்கு பல்வேறு தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதன்படி, கோவை-அசன்சல் சிறப்பு ரயில் (06017) வரும் 18, 25ம் தேதிகளில் (சனிக்கிழமை) இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ரயில் சேவைகளை ரத்து செய்து, தெற்கு ரயில்வே நிர்வாகம் நேற்று அறிவித்தது. இதேபோல், மறுமார்க்கத்தில் அசன்சல்-கோவை சிறப்பு ரயில் (06018) வரும் 20, 27ம் தேதிகளில் (திங்கட்கிழமை) இயங்குவதாக இருந்தநிலையில், அந்த ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : Coimbatore-Asansal ,
× RELATED மது, கஞ்சா போதையில் வாலிபர்கள் ரகளை