காஞ்சிபுரம், ஜன.8: மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் ஹெச்சிஎல் நிறுவனம் சார்பில் கேம்பஸ் இண்டர்வியூ நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் சேகர் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஜானகிராமன் வரவேற்றார். மனிதவள மேலாளர் ஆண்டனி முன்னிலை வகித்தார். மாணவர்களை தேர்வு செய்வதற்காக ஹெச்சிஎஸ் தொழில்நுட்ப நிறுவன அதிகாரிகள் சார்லஸ், கவிதா, சரண்யா ஆகியோர் கலந்து கொண்டனர். வேலைவாய்ப்பு முகாமில் 2018-19ம் ஆண்டுகளில் படித்த மாணவர்கள் மற்றும் 2020ம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மாணவர்களை 3 குழுக்களாக பிரித்து, வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
