×

22ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் வரும் 27ம் தேதி சென்னையில் திறக்கப்பட உள்ளது. இந்தநிலையில், அதிமுக அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வரும் 22ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.மேலும், இக்கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தல் பணிகள் குறித்தும், ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு குறித்தும், 27ம் தேதி சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 2 முறை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்த நிலையில் வரும் 22ம் தேதி 3வது முறையாக அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது….

The post 22ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Meeting ,Chennai ,Chief Chief ,Jayalalithah ,Indirect District Secretaries ,
× RELATED பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பாதை...