×

பாலக்காடு அருகே பகவதி கோயிலில் நிறை மாலை விழா

பாலக்காடு, ஜன. 3: சித்தூர் பகவதி அம்மன் கோயிலில் நிறை மாலை விழா விமர்சையாக நேற்று நடைபெற்றது. பாலக்காடு மாவட்டத்தில் பிரபலமான சித்தூர் - பழயனூர் பகவதி அம்மன் கோயில்களில் நிறை மாலை விழா வெகு சிறப்பாகக் கொண்டாடினர். ஆண்டுதோறும் மார்கழி மாதம் இரண்டாவது வியாழக்கிழமை நிறை மாலை திருவிழா நடப்பது வழக்கம். நிைற மாலை விழாவை முன்னிட்டு நேற்று காலை 4 மணிக்கு கோயில்களில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அம்மன் தங்க முகக்காப்பு மற்றும் தங்க ஆபரணங்கள், வண்ண மலர் மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர். படியணுர் கோயில் வளாகத்தில் அலங்காரம் செய்யப்பட்ட 3 யானைகள் மீது அம்மன் பஞ்சவாத்யத்துடன் ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Tags : evening ceremony ,Bhagavathi temple ,Palakkad ,
× RELATED 25 ஆண்டுகளுக்கு கழித்து ரீ – ரிலீஸ்...