×

திமுக இளைஞர் அணியினர் எலச்சிபாளையத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்செங்கோடு,  டிச.29: திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் ஒன்றியத்துக்கு நாளை  (30ம்தேதி) தேர்தல் நடக்கிறது. எலச்சிபாளையம் ஒன்றியம் 1வது வார்டு  ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய இளைஞர் அணி  அமைப்பாளர் ராஜா போட்டியிடுகிறார்.  
அவரை ஆதரித்து,  நாமக்கல் மேற்கு  மாவட்ட திமுக இளைஞர் அணி  அமைப்பாளர் மதுரா செந்தில் தலைமையில், முன்னாள்  ஒன்றிய செயலாளர் சேரன் சக்திவேல், தீபம் குணசேகரன் மற்றும் இளைஞர் அணி   நிர்வாகிகளும், தொண்டர்களும்,  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.  
அவர்கள் வேட்பாளருடன் வீடு வீடாகச் சென்று, துண்டு பிரசுரங்களை வழங்கி,  பொதுமக்களிடம் ஓட்டு கேட்டனர்.  வாக்காளர்கள்  அவர்களை  உற்சாகமாக  வரவேற்று, ஆதரவளிப்பதாக உறுதி கூறினர்.

Tags : DMK ,youth team ,voting ,
× RELATED குடிசை வீடு தீயில் எரிந்து சாம்பல்