×

விவேகானந்தா பாராமெடிக்கல் கல்லூரிகளில் பட்டமளிப்பு விழா

திருச்செங்கோடு, ஜன.10: திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி விவேகானந்தா கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளின் 28வது பட்டமளிப்பு விழா நடந்தது. பார்மசி கல்லூரி முதல்வர் முருகானந்தன் வரவேற்றார். நிறுவனங்களின் இணை மேலாண் இயக்குனர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரர் பட்டமளிப்பு விழாவை தலைமை வகித்து தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினரை பேராசிரியர் சுமதி அறிமுகம் செய்து வைத்தார். விழாவிற்கு பாதுகாப்பு அமைச்சகத்தின் முதுநிலை விஞ்ஞானி டாக்டர் கதிர்வேலு, கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். மருந்தியல் கல்லூரியின் 153 மாணவிகள், செவிலியர் கல்லூரியின் 110 மாணவிகள், துணை மருத்துவ அறிவியல் கல்லூரியின் 270 மாணவிகள் பட்டங்களை பெற்றனர்.

விவேகானந்தா பெண்கள் செவிலியர் கல்லூரியை சேர்ந்த 50 மாணவிகளும், மருந்தியல் கல்லூரியை சேர்ந்த 90 மாணவிகளும் பட்டங்களை பெற்றனர். மொத்தமாக 672 பேர் பட்டங்களை பெற்றனர். நிகழ்ச்சியில், கல்வி நிறுவனங்களின் தலைவர் கருணாநிதி, நிர்வாக இயக்குனர் குப்புசாமி, மருத்துவ இயக்குனர் கோகுலநாதன், ஆராய்ச்சி இயக்குனர் பாலகுருநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர்கள் செந்தில், சுமதி, ஜெசிந்தா ராஜ்குமார், ஹெர்ம்ஸ் மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Vivekananda ,Paramedical ,Colleges ,Thiruchengod ,28th Graduation Ceremony ,Thiruchengodu ,Sangakiri Vivekananda Educational Institutions and Hospitals ,College of Pharmacy ,Principal ,Murukanandan ,Dr. ,Arthnarishwarar ,
× RELATED ரூ.25.45 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்