×

குடிசை வீடு தீயில் எரிந்து சாம்பல்

பள்ளிபாளையம், ஜன.12: பள்ளிபாளையம் அடுத்துள்ள காடச்சநல்லூர் ஊராட்சி, களரங்காடு கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் (60). பனை மரமேறும் தொழிலாளியான இவருக்கு, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில், காலில் முறிவு ஏற்பட்டது. இதனால் சிறு சிறு வேலைகளுக்கு சென்று வருகிறார். நேற்று முன்தினம், இவரது குடிசை வீட்டில் மனைவி சம்பூரணம் சோறு சமைத்து விட்டு மெயின் ரோட்டில் உள்ள கடைக்கு சென்றுவிட்டார். குடிசையின் தென்மேற்கு மூலையிலிருந்து திடீரென புகை கிளம்பியது. இதை கண்டு சமையல் செய்வதால் ஏற்பட்ட புகையென அக்கம் பக்கத்தவர்கள் நினைத்தனர்.

ஆனால், சிறிது நேரத்தில் திகுதிகு என குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனால், குடிசை வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. குடிசையில் இருந்த துணிமணிகள், தானியங்கள், வீட்டு உபயோக பாத்திரங்கள், பட்டா, ஆதார், ரேசன்கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. தகவலறிந்த காடச்சநல்லூர் விஏஓ நல்லசாமி, சம்பவ இடத்திற்கு வந்து சேதங்களை பார்வையிட்டார்.

Tags : Tangavel ,Kalangadu ,Kadachanallur Uradachi ,
× RELATED மாவட்ட அளவில் தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு