×

காப்பர் கம்பிகள் கடத்திய ஆட்டோ, ஜீப் பறிமுதல்

பள்ளிபாளையம், ஜன.9: பள்ளிபாளையத்தில் தனியார் ஆலைகளில் புகுந்து காப்பர் கம்பிகளை திருடிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கம்பிகளை கடத்திச்சென்ற ஆட்டோ, ஜீப் மற்றும் 5 டூவீலர்களை கைப்பற்றி கோர்டில் ஒப்படைத்தனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த வெப்படை லட்சுமிபாளையத்தில் சூரிய சக்தி தயாரிக்கும் தனியார் ஆலை செயல்படுகிறது. இது போலவே வெள்ளிகுட்டை கிராமத்தில், தனியார் நூற்பு ஆலை இயங்கி வருகிறது. இந்த இரண்டு ஆலைகளிலும் கடந்த 4ம் தேதி இரவு காப்பர் கம்பிகள் திருட்டு போனது. இது குறித்து சோலார் மின்நிறுவனத்தின் உரிமையாளர் பாலாஜி, வெப்படை போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சின்னார்பாளையம் வாய்கால் பகுதியில் வெப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கால்வாய் கரையில் வந்த ஒரு சரக்கு ஆட்டோ, போலீசாரை கண்டதும் வந்த வழியாக திரும்பிச்செல்ல முயன்றது. இதை கண்ட போலீசார் சரக்கு ஆட்டோவை மடக்கி சோதனையிட்டனர். இதில் சுமார் 200 கிலோ காப்பர் கம்பிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஆட்டோவிலிருந்தவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர்.சரக்கு ஆட்டோவில் இருந்தது தனியார் ஆலைகளில் திருடிய காப்பர் கம்பிகள் என்றும், நான்கு நாட்களாக அப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த திருடர்கள் நேற்று முன்தினம் இரவு வெப்படையில் உள்ள எடிசன் என்பவரது பழைய இரும்பு கடைக்கு விற்பதற்காக கொண்டு சென்ற போது போலீசாரின் பிடியில் சிக்கியது தெரியவந்தது.

இதையடுத்து சரக்கு வாகனத்தில் இருந்த காந்திநகரை சேர்ந்த சஞ்சய்(20), படைவீடு சுபாஷ்(24), வெப்படை ஆரோன்(25) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து காப்பர் கம்பிகளை வாங்க ஒப்புக்கொண்ட, பழைதிருச்செங்கோடு, ஜன.9: திருச்செங்கோடு அருகே பலத்த போலீஸ் பதுகாப்புடன் 1 கி.மீ தூரத்திற்கு அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றினர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே திருமங்கலம் கிராமம் சின்ன கோட்டப்பாளையம் பகுதியில் வசித்து வரும் ஒரு குடும்பத்திற்கு, சொந்தமான சுமார் 5 ஏக்கர் பரப்பளவுள்ள விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை ஒட்டி இளையான் குட்டையான்காடு வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு செல்லும் சாலையில், 10 அடி அகலத்திற்கு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்றி தர வேண்டும் மற்றும் ஒரு இட்டேரி வழியாக சென்று தான், அந்த பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பல சமூகத்தவரின் விவசாய நிலங்களில் இருந்து, மரவள்ளிக்கிழங்கு லோடு ஏற்றி வர வேண்டும். அதற்கு இடையூறாக குடும்பத்தினரின் ஆக்கிரமிப்பு செய்துள்ளதோடு, இட்டேரி பகுதியில் வாகனம் செல்ல முடியாத அளவுக்கு அடைப்புகளை ஏற்படுத்தி வைத்திருந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் குடும்பத்தினரிடம் பேசியும், இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர் என பல தரப்பினரிடம் மனு கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலை இருந்தது. இதனால் அதே ஊரை சேர்ந்த சின்னத்தம்பி மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் வந்த தீர்ப்பில், வருவாய் துறையினர் அரசு புறம்போக்கு சாலையின் எல்லையை வரையறுத்து, ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றி தர உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் நேற்று வருவாய் துறையினர், போலீசார் உடன் சென்று, பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த குடும்பத்தினர் இதனை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் மலர்விழி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகபூப் பாஷா, வருவாய் ஆய்வாளர் சாந்தகுமார் ஆகியோர் எலச்சிபாளையம் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர், ஆக்கிரமிப்பு அகற்ற விடாமல் சுவற்றின் மேல் அமர்ந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்தார். உடனடியாக இன்ஸ்பெக்டர் ராதா அவரிடம் சென்று நீதிமன்ற உத்தரவுப்படிதான் நிலத்தை அளந்து ஆக்கிரமிப்பை அகற்ற வந்திருக்கிறோம். பணி செய்ய விடாமல் தடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்ததால், அந்த பெண் சுவற்றை விட்டு கீழே இறங்கினார். இதையடுத்து, சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு ஆக்கிரமிப்புகளை பொக்லைன் மூலம் அகற்றினர். நேற்று மாலை சுமார் 6 மணி வரை நடந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ய இரும்புகடை உரிமையாளர் எடிசனையும் போலீசார் கைது செய்தனர். காப்பர் கம்பிகளை கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு ஆட்டோ, ஜீப், ஐந்து டூ வீலர்களையும் போலீஸார் கைப்பற்றி குமாரபாளையம் கோர்ட்டில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட நான்கு பேர்களையும் பதினைந்து நாட்கள் சிறையில் அடைக்கும்படி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

Tags : Pallipalayam ,Lakshmipalayam ,Namakkal district… ,
× RELATED வேன் கவிழ்ந்து விவசாயி பலி