×

கந்திகுப்பத்தில் அனுமன் ஜெயந்தி விழா

கிருஷ்ணகிரி, டிச.27: கந்திகுப்பம் மற்றும் போலுப்பள்ளியில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. கந்திகுப்பம் கிராமத்தில் பக்தவீர ஆஞ்சநேயர் கோயிலில் 7ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி விக்னேஷ்வர பூஜை, மகா சுதர்சன ஹோமம், ஆஞ்சநேயர் ஹோமமும், மாலை சுந்தரகாண்ட பாராயணம், தவத்திரு பைரவ சுவாமிகள் ஆராதனை நடந்தது. வேள்வியை வரட்டணப்பள்ளி லட்சுமி நரசிம்மர் கோயில் அர்ச்சகர்கள் வெங்கடாத்திரி ஆச்சாரியர், விஜயாச்சாரியர், பாலச்சந்தர் ஆகியோர் செய்தனர்.

இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கந்திகுப்பம் அனுமன் நகர் ஊர் பொதுமக்கள், பக்தவீர ஆஞ்சநேய பக்தர்கள் செய்திருந்தனர். இதே போல் கிருஷ்ணகிரி அடுத்த போலுப்பள்ளி ஏரிக்கரையில் சக்தி ஆஞ்சநேயர் கோயிலில், நேற்று முன்தினம் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அபிஷேகம், ஆராதனை மற்றும் யாக பூஜை நடந்தது. இதில் போலுப்பள்ளி, வசந்தப்பள்ளி, பந்தாரப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

Tags : Hanuman Jayanthi Festival ,
× RELATED குஜிலியம்பாறை அருகே அனுமன் ஜெயந்தி விழா