×

ரபி பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

சேலம், டிச.18: சேலம் மாவட்ட விவசாயிகள் நடப்பாண்டில் ரபி பருவத்தில் பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பிக்க வேளாண்மை துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதுகுறித்து சேலம் வேளாண்மை இணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் விவசாயிகள் தங்களுடைய நிலத்தில் ரபி பருவத்தில் பயிர் சாகுபடி செய்துள்ளனர். பயிர்களுக்கு எதிர்பாராத இயற்கை இடர்பாடுகள், இழப்பு போன்றவை ஏற்படும் உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கச் செய்து விவசாயத்தில் நிலைபெற செய்ய பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் ரபி பருவத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தினை அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடட் என்ற முகமையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதில் விதைப்பு செய்ய இயலாமை, விதைப்பு தோல்வியுறுதல், மகசூல் இழப்பு மற்றும் வறட்சியினால் இடைக்கால துன்பம் ஏற்படுதல் ஆகிய இனங்களுக்கு அறிவிக்கை செய்யப்பட்ட அலகு அடிப்படையில் விவசாயிகள் காப்பீடு பெற தகுதியுடைவர்கள். உள்ளூர் இடர்பாடுகள் மற்றும் அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்பு ஆகிய இனங்களுக்கு தனிநபர் காப்பீடு பெற தகுதியுடையவர். உள்ளூர் இடர்பாடுகள் இனத்தில் பயிர் மூழ்குதல் ஆபத்து போன்றவை நெல் மற்றும் கரும்புக்கு பொருந்தாது.

கடன் மற்றும் கடன் பெறா விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய சோளத்திற்கு டிசம்பர் 20ம் தேதி, உளுந்து, ராகி டிசம்பர் 31ம் தேதி, நிலக்கடலைக்கு ஜனவரி 20ம் தேதி, நெல், மக்காசோளத்திற்கு பிப்ரவரி 15ம் தேதி, வெண்டை, வெங்காயத்திற்கு பிப்ரவரி 15ம் தேதி, வாழை, மரவள்ளி, தக்காளிக்கு பிப்ரவரி 28ம் தேதி, எளுக்கு பிப்ரவரி 29ம் தேதி, பருத்திக்கு மார்ச் 31ம் தேி மற்றும் கரும்புக்கு அக்டோபர் 31ம் தேதி கடைசி நாளாகும்.விவசாயிகள் ஏக்ருக்கு சோளம் ₹221, உளுந்து ₹236, ராகி ₹194, நிலக்கடலை ₹372,  நெல் ₹470, மக்காசோளம் ₹380, எள் %4168, பருத்தி ₹1920, கரும்பு ₹2875, வெண்டை ₹1060, வெங்காயம் ₹1740, வாழை ₹3135, மரவள்ளி ₹1755 மற்றும் தக்காளி ₹1850 பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் சேர அதற்கான ஆவணங்களுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள், பொது சேவை மையங்கள் மூலமாக உரிய பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு தங்களது வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : season ,Rabi ,
× RELATED கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2-ன் புதிய பாடல் “தமிழ் வாழ்த்து” வெளியீடு