×

ஆவின் பாலகத்தில் பணம், பொருட்கள் திருட்டு

விருத்தாசலம், டிச. 18: விருத்தாசலத்தில் உள்ள ஆவின் பாலகத்தில் இருந்து ரூ.3 ஆயிரம் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விருத்தாசலம் அரசு கலைக்கல்லூரி முன்பு ஆவின் பாலகம் இயங்கி வருகிறது. இந்த பாலகத்தில் பால், நெய், பாதாம் பால் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆவின் பாலகத்தை மூடிவிட்டு, ஊழியர்கள் வீட்டுக்கு சென்றனர். பின்னர் வழக்கம்போல் நேற்று காலையில் கடையை திறக்க வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து கடைக்குள் பார்த்த போது 38 ஆவின் நெய் பாட்டில்களும், 31 பாதாம் பால் பாட்டில்களும் காணாமல் போனது தெரியவந்தது. மேலும் ரூ.3 ஆயிரம் ரொக்கப்பணமும் திருடு போனதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Theft ,Avi ,
× RELATED ஓட்டலில் மனித கறி கேட்டு தகராறு சமையல் மாஸ்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு