×

வெண்ணைமலை ஐயப்ப நகரில் ஜல்லி கற்கள் கொட்டியதோடு சாலை பணி துவங்காததால் அவதி

கரூர், டிச. 17: கற்கள் கொட்டப்பட்டும் சாலைப்பணிகள் துவங்காததால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். கரூர் வெண்ணைமலை பகுதியில் உள்ள ஐயப்ப நகரில் சாலை அமைப்பதற்காக ஜல்லி கற்கள் கொட்டப்பட்டது. காதப்பாறை ஊராட்சி பகுதியில் உள்ள இந்த இடத்தில் தார்ச்சாலை அமைக்க கற்களை கொட்டியதோடு விட்டு விட்டனர். தார்சாலை அமைக்கப்படவில்லை. இதனால் நடந்தும் செல்ல முடியவில்லை. இருசக்கர வாகனங்களிலும் செல்ல முடியாமல் மக்கள்அவதிப்படுகின்றனர். ஏற்கனவே இருந்த சாலையை அப்படியே விட்டு விட்டிருந்தாலாவது எப்படியோ சமாளித்து இருப்போம். ஆனால் தற்போது சாலை முழுவதிலும் கற்களை நிரவி வைத்திருக்கின்றனர். கற்கள் விரிக்கப்பட்டுள்ள தெருவில் பொதுமக்கள் சென்றுவர சிரமப்படுகின்றனர். இதனால் சாலையைப்பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறோம். பணியை உடனடியாக நிறைவுசெய்து தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags : Iyappa ,town ,Vennemalai ,
× RELATED நெல்லை டவுன் ரத வீதியில் தேநீர்...