×

கரூர் வெங்கமேடு- வாங்கப்பாளையம் இடையே ஜல்லி கற்கள் பெயர்ந்து சேதமடைந்த சாலை

கரூர், டிச. 16: கரூர் வெங்கமேடு- வாங்கப்பாளையம் சாலை செப்பனிடாததால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கரூர் வெங்கமேட்டில் இருந்து வாங்கப்பாளையம் செல்லும் பழைய சேலம் சாலையில் அண்ணாசிலை அடுத்து உள்ள சாலை பராமரிப்பு செய்யப்படவில்லை.நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலையை பராமரிக்காததால் ஜல்லிகற்கள் பெயர்ந்து ஆங்காங்கே குழிகள் ஏற்பட்டுள்ளது. இந்த சாலை போக்குவரத்து மிகுந்த சாலை என்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினர் கவனத்திற்கு கொண்டு சென்றும் சாலையை செப்பனிட நடவடிக்கை இல்லை என அவர்கள் தெரிவித்தனர்.


Tags : Karur Venkamedu ,road ,Vangakapayyam ,
× RELATED பழநி கிரிவலப் பாதையில் சுற்றுச்சுவர்...