×

வள்ளியூரில் நிலா பேக்கரி, ஹோட்டல் திறப்பு விழா

வள்ளியூர், டிச.16:  வள்ளியூர் தங்க நாற்கர சாலையின் அருகில் உள்ள பிலாக்கொட்டைபாறை விலக்கில்  மிக பிரம்மாண்டமாக நிலா பேக்கரி, ஹோட்டல் திறப்பு விழா நடந்தது.   வள்ளியூர் ஜோஸ் கார்மெண்ட்ஸ் உரிமையாளரும், வணிகர் சங்க தலைவருமான எட்வின் ஜோஸ், ராஜ் கன்ஸ்ட்ரெக்ஷன் உரிமையாளர் ராஜ், தொழிலதிபர் சுரேஸ் ஆகியோர்  இணைந்து திருநெல்வேலியிலிருந்து-கன்னியாகுமரி தங்க நாற்கர சாலையில் வள்ளியூர் அருகேயுள்ள பிலாக்கொட்டைபாறை விலக்கில் நேற்று புதியதாக நிலா பேக்கரிஹோட்டால் திறக்கப்பட்டது. வள்ளியூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் லாரன்ஸ் தலைமை வகித்து திறந்து வைத்தார்.பியூலா எட்வின், பால்கனி முத்துராஜ், ஹெலின் சுரேஷ் திருவிளக்கு ஏற்றினார். வள்ளியூர் பஞ்குதந்தை லாரன்ஸ் அர்ச்சித்தார். தெட்ஷன மாற நாடார் சங்க ஆட்சிக்குழு  தலைவர் கணேசன் பேக்கரி உற்பத்தி பிரிவை திறந்து வைத்தார். இக்கடையின் முக்கிய அம்சங்கள் என்னவென்றால் சுகாதாராமான திறந்தவெளியில் இயற்கையை ரசித்துக்கொண்டு சாப்பிடும்  வசதி உள்ளது. குழந்தைகள் விளையாடி மகிழ்வதற்கு ஊஞ்சல், சருக்கு, பொம்மை ஊஞ்சல், டைனோசர் சருக்கு மற்றும் வெளியூரிலிருந்து வரும் பயணிகளுக்கு நவீன கழிப்பிட வசதியும் செய்யப்பட்டுள்ளது. திறப்பு விழாவை முன்னிட்டு சிறுவர்களுக்கு குதிரை சவாரி 3 நாட்கள் இலவசமாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறப்பு விழாவில் வள்ளியூர் இன்ஸ்பெக்டர் திருப்பதி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பிரபு, சமக மாவட்ட இளைஞர் அணி துணைச்செயலாளர் அருள்ராஜ்,   பெருந்தலைவர் மக்கள் கட்சி நெல்லை மாவட்ட கிழக்கு மாவட்ட தலைவர் முருகன், வழக்கறிஞர் ஜோசப் ராஜா ஜெகன், தெற்குகள்ளிகுளம் ஆசிரியர் புஷ்பராஜ், ராஜேந்திரன், ஹரிகராபிரகாஷ், ஜெய்சன், பெனிரிக்ட் ஜோஸ், பாலமுருகன், ராஜா, ஜோசப்ராஜன், பாபு, தாசன், லிங்கதுரை, பொது நல அமைப்பாளர்  அலெக்ஸ்செல்வன் உட்பட வள்ளியூர் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், வள்ளியூர் வணிகர் சங்க நிர்வாகிகள், அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை நில பேக்கரி உரிமையாளர்கள் குடும்பத்தினர் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Tags : Nila Bakery ,Valliyur ,Hotel Opening Ceremony ,
× RELATED அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி வாக்கு சேகரிப்பு..!!