×

மேலகடையநல்லூர் கருமாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா கோலாகலம்

கடையநல்லூர், ஏப்.25: கடையநல்லூர் மேலக்கடையநல்லூரில் தேவி கருமாரியம்மன் கோயில் சித்ரா பவுர்ணமி மஹோற்சவ விழாவில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி ேநர்த்திக்கடன் செலுத்தினர். மேலக்கடையநல்லூர் தேவி கருமாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் பூக்குழி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பூக்குழி திருவிழா கடந்த 14ம்தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவில் தினமும் காலை, மாலை வேளைகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடந்தது. விழாவில் 19ம்தேதி சுமங்கலி பூஜை, 21ம்தேதி புஷ்பாஞ்சலி நடந்தது. 22ம்தேதி அண்ணாமலை நாதர் கோயிலில் இருந்து அக்னி சட்டி ஊர்வலம், அம்மன் வீதிஉலா நடந்தது. விழாவில் முக்கிய நாளான நேற்று முன்தினம் காலையில் அண்ணாமலை நாதர் கோயிலில் இருந்து குற்றால தீர்த்தம் ஊர்வலமாக எடுத்து வருதல், சிறப்பு அபிஷேகம், மாலையில் முளைப்பாரி வீதிஉலா, நள்ளிரவில் பூ வளர்த்தல், நேற்று அதிகாலை 3 மணிக்கு மேல் விரதமிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு படைப்பு தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

The post மேலகடையநல்லூர் கருமாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா கோலாகலம் appeared first on Dinakaran.

Tags : Pukkuzhi Festival Kolakalam ,Melakadayanallur Karumariyamman Temple ,Kadayanallur ,Chitra Pournami ,Devi ,Karumariamman Temple ,Melakadayanallur ,Devi Karumariamman ,Pookukhi festival ,Chitrai ,Melagadayanallur Karumariyamman Temple Pookkuzhi Festival Kolagalam ,Dinakaran ,
× RELATED மனைவியை தாக்கிய கணவர் கைது