விழுப்புரம், டிச. 10: சோனியாகாந்தி பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் வெங்காயம் வழங்கினர். காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளையொட்டி, விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் புதிய பேருந்துநிலையத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக வெங்காயம் வழங்கினர். நாடு முழுவதும் வெங்காயம் விலை உயர்ந்து, கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
மக்களின் கஷ்டத்தை போக்கிடும் வகையில் சோனியாகாந்தி பிறந்தநாளையொட்டி இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் வெங்காயத்தினை வழங்கினார்கள். இளைஞர் காங்கிரஸ் மாவட்டத்தலைவர் ஸ்ரீராம் தலைமையில், மாநிலபொதுக்குழு உறுப்பினர் சிவா, நிர்வாகிகள் சரவணன், ரமணன், அருள்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மத்திய பாஜக அரசின் பொருளாதார வீழ்ச்சியை எடுத்துரைக்கும் வகையில் இனிப்புக்கு பதிலாக வெங்காயத்தினை வழங்கியதாக கட்சியினர் தெரிவித்தனர்.