சேலம் தீவட்டிப்பட்டியில் பிரபல கொள்ளையன் குண்டாசில் கைது

சேலம், டிச.9: சேலம் தீவட்டிப்பட்டியில் பிரபல கொள்ளையனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து, சிறை வைத்தனர்.சேலம் அழகாபுரம் பெரியபுதூரை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் சரவணன் (24), பிரபல கொள்ளையன். இவரை கடந்த மாதம், தீவட்டிப்பட்டி போலீசார் வழிப்பறி வழக்கில் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கொள்ளையன் சரவணன் மீது ஏற்கனவே திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ஓமலூர், தீவட்டிப்பட்டி பகுதியில் உள்ளது. தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வந்ததால், கொள்ளையன் சரவணனை குண்டர் தடுப்பு காவலில் சிறை வைக்க இன்ஸ்பெக்டர் முருகன், மாவட்ட எஸ்பி தீபா கனிகர் மூலம் கலெக்டர் ராமனுக்கு பரிந்துரை செய்தார். இப்பரிந்துரையை ஏற்ற கலெக்டர், பிரபல கொள்ளையன் சரவணனை குண்டர் தடுப்பு காவலில் சிறை வைக்க உத்தரவிட்டார். இதற்கான ஆணையை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் போலீசார் கொடுத்தனர்.

Related Stories:

>