×

நியாயவிலை கடை பணியாளர்கள் சங்கத்தினர் கருப்பு சட்டை அணிந்து கூட்டத்தில் பங்கேற்பு

விருத்தாசலம், டிச.1:   தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்க கூட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தங்கராசு தலைமை தாங்கினார். இணை செயலாளர் சேதுராமன்,  மாநில குழு உறுப்பினர் பாலு, சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விருத்தாசலம் வட்ட வழங்கல் அலுவலர் முருகேஸ்வரி, கூட்டுறவு சார் பதிவாளர்கள் கம்மாபுரம் வட்டாரம் சண்முகம், விருத்தாசலம் வட்டாரம் சிவகுருநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். நகர பொறுப்பாளர் ராஜ்குமார் வரவேற்றார்.

நவம்பர் 30ம் தேதி(நேற்று), டிசம்பர் 6 மற்றும் 13ம் தேதிகளில் கருப்பு சட்டை அணிந்து மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் திருச்சியில் நடைபெறுவதையொட்டி, நேற்று நடந்த கூட்டத்தில் பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து கலந்துகொண்டனர். பொது விநியோக திட்டத்திற்கு என தனித்துறை அமைக்கப்பட வேண்டும். கூட்டுறவு துறை பணியாளர்களுக்கு டிஎன்சிஎஸ்சிக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அத்தியாவசியமான பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் பொட்டலமாக வழங்கப்பட வேண்டும்.

பணி வரன்முறை செய்யப்படாத பணியாளர்களை எவ்வித நிபந்தனையுமின்றி பணி வரன்முறை செய்திடல் வேண்டும். பணியாளர்கள் வாங்கும் கடைசி மாத ஊதியத்தில் சரிபாதியை ஓய்வூதியமாக வழங்கப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வெங்கடேசன் நன்றி கூறினார்.

Tags : Attendees ,shop staff ,
× RELATED ரேஷன் கடை ஊழியர்களுக்கு போதுமான...