×

பைனான்ஸ் நிறுவன மேலாளர் தற்கொலை

கிருஷ்ணகிரி, நவ.27: மகாராஜகடை அருகே உள்ள வெண்ணம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முருகன்(38). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர் பலரிடம் கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பி கொடுக்க முடியாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளனர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட முருகன் அவரது நிலத்தில் உள்ள மரத்தில் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிருஷ்ணகிரி போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Accounting Company Manager Suicide ,
× RELATED பைனான்ஸ் நிறுவன மேலாளர் தற்கொலை