×

உத்தனப்பள்ளி ஊராட்சியில் ₹10.50 லட்சத்தில் தார்சாலை பணிகள்

சூளகிரி, நவ.26: சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி ஊராட்சி தேவவஸ்தானபள்ளி கிராமத்தில்,  ₹10.50 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. இதில் வேப்பனஹள்ளி எம்எல்ஏ முருகன் கலந்து கொண்டு, பணிகளை துவக்கி வைத்தார். அப்போது அங்கு வந்த தேவஸ்தானப்பள்ளி கிராமத்தில் உள்ள  அரசு தெலுங்கு, தமிழ் மேல்நிலைபள்ளியின் தலைமை ஆசிரியர் பிரேம்குமார், பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டி தரும்படியும், பள்ளி வளாகத்தை சுற்றியுள்ள பாறைகளை அகற்றி, புதர் மண்டிக்கிடக்கும் செடி, கொடிகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்எல்ஏ முருகனிடம் கோரிக்கை மனு வழங்கினார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ தெரிவித்தார். நிகழ்ச்சியில், தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ், மாவட்ட சிறுபான்மை அமைப்பாளர் ஷேக் ரஷீத், ஒன்றிய நிர்வாகி ஜியாஉல்லா, ஒன்றிய துணை செயலாளர் சீனிவாசன், நிர்வாகிகள் சந்தோஷ், முருகன், ராமர், செந்தில் சின்னதுரை, ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags : Uthanapalli Panchayat ,
× RELATED கஞ்சா விற்ற முதியவர் கைது