×

மாருதி மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி துவக்கம்

கிருஷ்ணகிரி, நவ.22:  வேப்பனப்பள்ளி ஓன்றியத்திற்குட்பட்ட  வே.மாதேப்பள்ளி கூட்டு ரோட்டில் இயங்கி வரும் மாருதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் குப்பம் அகஸ்தியா இண்டர்நேஷனல் பவுண்டேஷன் சார்பில், 3 நாள் அறிவியல் கண்காட்சி துவங்கி நடைபெற்று வருகிறது.

துவக்க விழாவிற்கு பள்ளியின் நிறுவனர் ஜெயராமன் தலைமை வகித்தார். அனைவரையும் தாளாளர் தனுஜா ஜெயராமன் வரவேற்றார். மாவட்டகல்வி அலுவலர் கலாவதி, வட்டார கல்வி அலுவலர் பெலிட்டா மேரி ஆகியோர் குத்து விளக்கேற்றி வைத்தனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார். அகஸ்தியா இண்டர்நேஷனல்ப வுண்டேசன் இயக்குனர் பத்மநாபன் குமார், அகஸ்தியா பவுண்டேஷன் துறைத்தலைவர் ஜெயாம்மா, பயோ டிஸ்கவரி துறையைச் சேர்ந்த சாயதேவி மற்றும் வேப்பனஹள்ளி கலாம் அறிவியல் மன்றத்தின் செயலாளர் நித்தியானந்தரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.

இதுகுறித்து பள்ளியின் தாளாளர் தனுஜா ஜெயராமன் கூறுகையில், அறிவியல் கண்காட்சியானது 3 நாட்கள் நடைபெறும். இக்கண்காட்சியில் 500க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகளை மாணவ, மாணவியர்கள் காட்சிக்கு வைத்துள்ளனர். ஓசூர் கல்வி மாவட்டத்தில் இருந்து அரசுப்பள்ளி, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டு வருகின்றனர் என்றார்.

Tags : Launch ,Science Exhibition ,Maruti Matric School ,
× RELATED திருப்பாலைக்குடி அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி