×

அட்மா திட்டத்தின் கீழ் பண்ணைப்பள்ளி பயிற்சி முகாம்

போச்சம்பள்ளி,  நவ.7: அட்மா திட்டத்தின் கீழ் பருத்தியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை  பண்ணைப்பள்ளி பயிற்சி முகாம் நடைபெற்றது. மத்தூர் வட்டாரம் பூசாரிக்கொட்டாய் கிராமத்தில், அட்மா திட்டத்தின் கீழ், பண்ணைப்பள்ளி பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. முகாமிற்கு கிருஷ்ணகிரி வேளாண்மை அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுனர் செந்தில்குமார் தலைமை வகித்தார். பருத்தியில் விதை நேர்த்தி மற்றும் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை மற்றும் பிரதமரின் கிஸான் திட்டம் குறித்து வேளாண்மை அலுவலர் நீலகண்டன் விளக்கினார். மத்தூர் துணை வேளாண்மை அலுவலர் சீனிவாசன், விவசாயிகளுக்கு மானியத் திட்டங்கள் பற்றி விளக்கினார். உதவி வேளாண்மை அலுவலர் கோவிந்தசாமி நுண்ணீர் பாசன திட்டம் குறித்து பேசினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜ்குமார், ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரித்தல் குறித்து விளக்கினார். முகாமிற்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் சாரதி, கிரிஜா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Farm School Training Camp ,Adm ,
× RELATED தரகம்பட்டியில் அமைக்கப்பட்ட தார்...