×

தேன்கனிக்கோட்டையில் சிலிண்டர் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்


தேன்கனிக்கோட்டை, நவ.6: தேன்கனிக்கோட்டையில் இந்தியன் ஆயில் கார்பரேசன் சார்பில் எரிவாயு சிலிண்டர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
தேன்கனிக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்தியன்ஆயில் கார்பரேசன் சார்பில் எரிவாயு சிலிண்டர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமில் இந்தியன் ஆயில் கார்பரேசன் சேலம் மண்டல விற்பனை அலுவலர் செவின், ஜெயஸ்ரீகேஸ் ஏஜன்சீஸ் நிர்வாகி ரஜேஷ்ஸ்ரீவரன், தாலுகா வழங்கல் அலுவலர் ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு எரிவாயு சிலிண்டர் பாதுகாப்பாக உபயோகிப்பது குறித்து விளக்கம் அளித்தனர்.முகாமில் வருவாய் ஆய்வாளர் ரகு, எஸ்ஐ ஆறுமுகம், பள்ளி தலைமை ஆசிரியர் அம்பிகா, ஆசிரியர்கள் சிவகுமார், சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை ஜெயஸ்ரீகேஸ் ஏஜன்சீஸ் மேலாளர் ராமச்சந்திரன், கணேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Camp ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு