×

நெல்வயல்களை சூழ்ந்த வெள்ளம்

பூதப்பாண்டி: இறச்சகுளம் அரசு தொடக்க பள்ளியில் மழைநீர் புகுந்தது. இதுபோன்று ஈசாந்திமங்கலத்தை அடுத்த நங்காண்டி ஊர் குடியிருப்புகளில் வெள்ளம் சூழந்துள்ளது. இதனால் மக்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். இதுபோன்று ஈசாந்திமங்கலத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம், பகுதிநேர சுகாதார மேம்பாட்டு அலுவலகமும் தண்ணீரீல் சூழ்ந்துள்ளது. மேலும் மழைக்கு இறச்சகுளத்தில் இருந்து அருமநல்லூர் வரை நடவு செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மரச்சீனி தோட்டங்களிலும் தண்ணீரில் மூழ்கின. தெரிசனங்கோப்பில் இருந்து அருமநல்லூர் சாலையில் பழையாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

Tags : Floods ,paddy fields ,
× RELATED நிவர் புயலால் விடிய விடிய விடாமல்...