×

‘வைப்புநிதி உங்கள் அருகில்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாகர்கோவில், ஏப்.24: வருங்கால வைப்புநிதி நிறுவனம் சந்தாதாரர்கள் மற்றும் தொழிலதிபர்கள்-தொழில்நிறுவனங்களுக்கு வைப்புநிதி உங்கள் அருகில் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. வருங்கால வைப்புநிதி நிறுவனம் சந்தாதாரர்கள் மற்றும் தொழிலதிபர்கள்-தொழில்நிறுவனங்களுக்கு நிதி ஆப்கே நிகத்-2.0 வைப்புநிதி உங்கள் அருகில் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏப்ரல் 29ம் தேதி குட்டைக்கோடு யூனியன் கிறிஸ்டியன் பாலிடெக்னிக்கில் வைத்து நடைபெறும். இந்நிகழ்ச்சியின் கருப்பொருள் உறுப்பினர் ஓய்வூதியம் மற்றும் இறந்தவர்களின் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அனாதை ஓய்வூதியம் மற்றும் ஊனமுற்றோர் ஓய்வூதியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்.

மேலும் இந்நிகழ்ச்சி இபிஎப்(EPF) சந்தாதாரர்களுக்கான குறை தளமாகவும் தகவல் பரிமாற்ற தளமாகவும் செயல்படும். புகார்களை, வருங்கால வைப்புநிதி அமலாக்கம் செய்யப்பட்ட தொழில்நிறுவனங்கள், உறுப்பினர்கள், மத்திய அறங்காவலர் குழுவின்(CBT) உள்ளூர் உறுப்பினர்கள், பிராந்தியகுழு உறுப்பினர்கள், தொழிற்சங்கங்களின் அலுவலக பொறுப்பாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள், இபிஎப்சந்தாதாரர்கள், ஓய்வூதியதாரர்கள் போன்றவர்கள் சமர்ப்பிக்கலாம். குறைகளானது முடிக்கப்படாத பிஎப் மற்றும் ஓய்வூதியம், செயல்படாத கணக்குகளின் தீர்வு, பிடிக்கப்படாத/செலுத்தப்படாத பிஎப் மற்றும் ஓய்வூதியம், சந்தாக்கள், யுஏஎன் பெற முடியாமை, உறுப்பினர்களின் பெயர், பிறந்ததேதி, பணியில் சேர்ந்த தேதி, பணியிலிருந்து விலகிய தேதி, ஆகியவற்றிற்கான திருத்தம், ஓய்வூதியம் கிடைக்கப்பெறாமை என்ற அடிப்படையில் இருக்க வேண்டும். (உறுப்பினர்கள், ஓய்வூதியதாரர்கள் முதலாளிகள் மற்ற பங்கேற்பாளர்கள்) ஓய்வூதியம் கிடைக்கப்பெறாமை, வருங்கால வைப்புநிதி தகுதி தொடர்பான குறைகளைக்கொண்ட இதில் தங்கள் குறைகளை அல்லது கோரிக்கைகளை சமர்ப்பிக்கலாம்.

மேலும் இன்னும் மூன்று மாதங்களில் 58-வயதை அடையும் உறுப்பினர்கள் ஓய்வூதிய ஆவணங்களை சமர்ப்பிப்பது தொடர்பான இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம். மேலும் இபிஎப் மற்றும் MP சட்டம், 1952 ன் கீழ் பதிவு செய்துள்ள நிறுவனங்கள். வ.வை.நி. நிறுவனத்தின் முயற்சிகள், கவரேஜ் மற்றும் சட்ட திட்ட விதிகள் தொடர்பான சந்தேகங்கள், ECR தொடர்பான பிரச்சனைகள், யுஏஎன்(UAN) ஒதுக்கீடு செய்தல் மற்றும் புதிய பணியாளர்களை சேர்ப்பது தொடர்பான உதவிகளைப் பெற இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். நிதி ஆப்கே நிகத்-2.0 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்பும் பங்குதாரர்கள் தங்கள் தங்கள் குறைகளை நேரடியாகவோ தபால் மூலமாகாவோ இந்த அலுவலக மின் அஞ்சல்- ro.nagercoil@இபிஎப்india.gov.in மூலம்_பதிவு செய்து கொள்ளலாம்.

The post ‘வைப்புநிதி உங்கள் அருகில்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : NAGARCO, AP.24 ,Nikat ,Dinakaran ,
× RELATED குத்துச்சண்டை வீரர்களுக்கு துருக்கியில் பயிற்சி